விக்டோரியாவில் குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோருக்கான சேவைகள் - தமிழ்

விக்டோரிய அரசாங்கத்தின், ‘குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோர் உதவித்தொலைபேசி சேவை (ஹெல்ப்லைன்)’ இலவச தகவல், ஆலோசனை மற்றும் ஆதரவினை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வழங்குகிறது.

குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோர் உதவித் தொலைபேசி சேவை (ஹெல்ப்லைன்)

திறந்திருக்கும்: முற்பகல் 8 மணியிலிருந்து மதியம் 11 வரை, வாரம் 7 நாட்கள்
அழைப்பு: 1800 819 817
எழுத்து வடிவம்: 0427 767 891
மின் அஞ்சல்: vsa@justice.vic.gov.au (External link)

ஹெல்ப்லைன் க்கு அழைப்பு, எழுத்துவடிவம் (குறுஞ்செய்தி) அல்லது மின்அஞ்சல் செய்யவேண்டியது:

 • போலீசாருக்கு (காவல்துறை) ஒரு குற்றச்செயலை அறிவிப்பது எவ்வாறெனக் கண்டறியவும்
 • உங்களுக்கு உதவக்கூடிய ஏனைய சேவைகளைப் பார்ப்பதற்கும்
 • விக்டோரியன் நீதித்துறை எவ்வாறு செயற்படுகிறது என்பது குறித்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும்
 • நீதிமன்றில் நீங்கள் ஒரு சாட்சிக்காரராக இருக்க வேண்டி ஏற்பட்டால், ஆதரவினைப் பெற்றுக்கொள்ளவும்
 • உங்களுக்குத் தகைமைகள் இருப்பின், இழப்பீடு மற்றும் நிதி உதவிக்காக விண்ணப்பிப்பதற்கான உதவியை பெற்றுக்கொள்ளவும்
 • உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நீங்கள் என்ன செய்யமுடியும் என்பது குறித்து கண்டறிந்து கொள்ளவும் ஆகும்.

தற்சமயம் நீங்கள் ஆபத்தில் இருந்தால், மூன்று பூஜ்ஜியத்தில் (000) போலீசாரை அழையுங்கள். ஒரு போலீஸ் நிலையத்திற்கும் நீங்கள் போகலாம்.

பல்வேறுபட்ட நிலவரங்களில் உள்ள மக்களுக்கு நாம் உதவுகிறோம்

ஒவ்வொரு ஆண்டும், குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்ட பல்வேறு வயதினர், பாலினத்தைச் சேர்ந்தோர் மற்றும் பின்புலத்தைக்கொண்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு நாங்கள் உதவுகிறோம்.

ங்கள் அந்தக் குற்றச்செயலை போலீசாருக்கு முறையிட விரும்பாவிட்டாலும்கூட எம்மால் உதவ முடியும்

ஒரு குற்றச்செயல் குறித்துப் போலீசாருக்கு முறையிடச் சிறந்த காரணங்கள் பல உண்டு. அவர்கள் உங்கள் முறைப்பாட்டை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வார்கள். அத்துடன் குற்றச்செயலைச் செய்தவரைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். அவர்கள் உங்களையும் பாதுகாக்க முடியும்.

நீங்கள் ஓர் அறிக்கையைச் செய்ய தயாராக இல்லையானால், அல்லது போலீசாருடன் பேசுவது குறித்துக் கவலைகொண்டால், இந்த உதவித் தொலைபேசி சேவை பின்வருவனவற்றைச் செய்யும்:

 • உங்களுடன் பேசி உங்கள் நிலவரத்தைப் புரிந்துகொள்ளும்
 • அந்தக் குற்றச்செயலை நீங்கள் அறிவிக்க விரும்பாவிட்டாலும், உங்களுக்கு உதவக்கூடிய சேவைகளைத் தேடிப்பார்க்கும்
 • உங்களுக்கு விருப்பமானால், போலீசாருடன் பேசுவதற்கு உதவும்.

நீங்கள் ஒரு மொழிபெயர்ப்பாளரை உபயோகிக்கலாம்

உங்களுக்கு ஒருவர் தேவைப்பட்டால், ஒர் இலவச மொழிபெயர்ப்பாளரை ‘ஹெல்ப்லைன்’ உங்களுக்குப் பெற்றுத்தரும். உங்களுக்கு ஒர் மொழிபெயர்ப்பாளரைப் பெற்றுத்தருவதற்கு ‘ஹெல்ப்லைன்’ ஐ அழைக்குமாறு வேறொருவரிடம் கூட நீங்கள் கேட்கலாம்.

ஒரு மொழிபெயர்ப்பாளரைப் பெற்றுக்கொள்வதற்கு:

 1. 1800 819 817 இல் ‘ஹெல்ப்லைன்’ ஐ அழையுங்கள்
 2. உங்கள் பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் உங்கள் மொழியைக் கூறுங்கள்
 3. ஓர் மொழிபெயர்ப்பாளர் உங்களை திரும்பவும் அழைப்பார்.

அந்த மொழிபெயர்ப்பாளர் அழைக்கும்போது, அது ஒரு ‘தனியார் இலக்கம்’ (private number) ‘தடுக்கப்பட்டுள்ளது’ (blocked) அல்லது ‘ அழைப்பவர் அடையாளம் இல்லை’ (no caller ID) போல் உங்கள் தொலைபேசியில் வெளிக்காட்டும்.